சென்னை சைதாப்பேட்டையில் கழிவுநீர் கலந்த குடிநீர் அருந்தியதால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டு 11 வயது சிறுவன் உயிரிழந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் அரசியல் ரீதியாக மாறியுள்ள நிலையில், குடிநீரில் எந்தவித பிரச்னையும் இல்லை என்று ஆய்வு தகவல் உள்ளது. பிரேத பரிசோதனை செய்த பிறகு இறப்புக்கான காரணம் தெரியவரும் என்று அமைச்சர் மா. சுப்பிரமணியன் விளக்கமளித்துள்ளார்.