பாஜக ரவுடிகளின் பட்டியல் என 124 பேர் கொண்ட பட்டியலை தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ளார். தமிழகத்தில் உள்ள ரவுடிகளை ஒன்றிணைத்து, பாஜகவை நடத்தி வருவதாக குற்றம் சாட்டியுள்ள அவர், பாஜகவில் உள்ள 124 ரவுடிகளின் மீது 834 வழக்குகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். முன்னதாக, பாஜக தலைவர் அண்ணாமலை, செல்வப்பெருந்தகையை முன்னாள் ரவுடி என விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.