ஓமன் கடற்பகுதியில் எண்ணெய் டேங்கர் கவிழ்ந்து விபத்துக்குள்ளனது. இந்த கப்பலில் 13 இந்தியர்களும் 3 இலங்கையை சேர்ந்தவர்களும் பணியாற்றி வருவதாக ஓமான் கடல்சார் பாதுகாப்பு மையம் நேற்று இரவு தெரிவித்துள்ளது. அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. ‘பிரெஸ்டீஜ் பால்கன்’ என்ற எண்ணெய் டேங்கர் கடலில் தலைகீழாக மூழ்கியது கண்டுபிடிக்கப்பட்டது. எண்ணெய் கசிவு உள்ளதா என்பதை ஓமன் அதிகாரிகள் உறுதிப்படுத்தவில்லை.