இலங்கையில் இணைய மோசடியில் ஈடுபட்டதாக 137 இந்தியர்களை இலங்கை கைது செய்துள்ளது. தலைநகர் கொழும்பில் நீர்கொழும்பு, பத்தரமுல்லை மற்றும் மடிவெல பகுதிகளில் வைத்து போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் சூதாட்டம் மற்றும் நிதி மோசடியில் ஈடுபட்டதாக இலங்கை குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குற்றம் சாட்டினர். அவர்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் துபாயில் தொடர்ந்து தங்கள் குற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக சந்தேகிக்கப்படுகிறது.