நாடு முழுவதும் 1,563 தேர்வர்களுக்கு நீட்-யுஜி தேர்வை தேசிய தேர்வு முகமை இன்று ஞாயிற்றுக்கிழமை நடத்தவுள்ளது. மதியம் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை தேர்வு நடைபெறும். முன்னதாக நடத்தப்பட்ட நீட் தேர்வில் இந்த 1,563 மாணவர்களுக்கு என்டிஏ கருணை மதிப்பெண்கள் சேர்த்தது. இது நாடு முழுவதும் சர்ச்சையை ஏற்படுத்தியதால் உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி 1,563 மாணவர்களுக்கு மீண்டும் ஒருமுறை மறுதேர்வு நடத்தப்படுகிறது.