1582ஆம் ஆண்டுக்கு முன் பயன்படுத்தப்பட்ட ஜூலியன் நாட்காட்டி, சாதாரண சூரிய ஆண்டை விட 11 நிமிடங்கள் 14 வினாடிகள் அதிகமாக இருந்தது. இதனால், 1582ஆம் ஆண்டில் ஜூலியன் நாட்காட்டி 10 நாட்கள் கூடுதலாக இருந்தது. இதன் காரணமாக, ஈஸ்டர் தேதியை தீர்மானிப்பது சிக்கலாக இருந்ததால், போப் கிரிகோரி தனது புதிய மற்றும் துல்லியமான காலண்டரை தொடங்கும் போது 1582ஆம் ஆண்டில் அக்டோபர் மாதத்தில் 10 நாள்களை தவிர்த்தார்