ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில், இந்திய அணி வேண்டுமென்றே பந்தை சேதப்படுத்தியதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல் ஹக் குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து பேசிய அவர், “16ஆவது ஓவரில் அர்ஷ்தீப் எப்படி புதிய பந்தை ரிவர்ஸ் ஸ்விங் செய்தார் என்று தெரிய வேண்டும். 12ஆவது அல்லது 13ஆவது ஓவரிலேயே பந்து ஸ்விங்காக மாறியதா? நடுவர்கள் கண்களைத் திறந்து நடுவாண்மை செய்ய வேண்டும்” என காட்டமாக கூறினார்.