வேலூரை சேர்ந்த 17 வயது சிறுவன் திருப்பூர் கல்லம்பாளையத்தில் தங்கியிருந்து கடையில் வேலை செய்து வந்தான். இந்த நிலையில் 16 வயது சிறுமியுடன் அவனுக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. பின்னர் அந்த சிறுமியை ஆசைவார்த்தை கூறி தனது சொந்த ஊருக்கு அழைத்துசென்று பாலியல் தொந்தரவு கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் வடக்கு மகளிர் போலீசார் சென்று சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர். சிறுவன் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் கைது செய்தனர்.