சென்னை விருகம்பாக்கத்தை சேர்ந்த 10வது படிக்கும் 16 வயது சிறுவன் குடும்ப வறுமை காரணமாக அதே பகுதியில் உள்ள துணிக்கடை ஒன்றில் கடந்த 5 மாதங்களாக வேலை பார்த்து வந்துள்ளார். அதே துணிக்கடையில் வேலைபார்க்கும் 30 வயதான வனதேவி சிறுவனை காதல் வலையில் வீழ்த்தியுள்ளார். இதனையடுத்து கடந்த 14 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறி வடபழனி முருகன் கோவிலில் திருமணம் செய்துகொண்டனர். இதனையடுத்து சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் இருவரையும் மீட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.