சென்னை அண்ணாநகர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுமி காணாமல் போனதை தொடர்ந்து போலீசார் சிறுமியை செல்போன் எண்ணை வைத்து தேடியபோது திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள குக்கிராமத்தில் அவர் இருப்பது தெரியவந்தது. அவரை மீட்ட போலீசார் விசாரித்ததில், பேஸ்புக் மூலம் பழக்கமான வினோத் என்பவரை நம்பி சென்ற சிறுமியை திருவண்ணாமலையில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். மேலும் வினோத்தின் நண்பர்களான ஜீவா (21), அஜித் (21) ஆகியோரை வைத்து தன்னை பாலியல் வன்கொடுமை செய்யவைத்ததாக கூறியுள்ளார். இதனையடுத்து அவர்களை போக்ஸோ சட்டத்தில் கைது செய்த போலீசார் வினோத்தை தேடி வருகின்றனர்.