ராணிப்பேட்டை நெடும்புலி கிராமத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவரான கணபதி என்ற 23 வயது இளநருக்கு திருமணம் ஆகி இரண்டு ஆண் பிள்ளைகள் உள்ளனர். இவ்வாறு 17 வயது மாணவியுடன் பழகி வந்த நிலையில் கடந்த ஆறு மாதத்திற்கு முன்பு கணபதி அந்த மாணவியை காதலிப்பதாக கூறிய நிலையில் அந்த மாணவி நீங்கள் திருமணம் ஆனவர் உங்களுக்கு மனைவி உள்ளார் என்று கூறியுள்ளார்.
அதற்கு கணபதி எனது மனைவியை பிடிக்கவில்லை நான் உன்னை தான் விரும்புகிறேன் என்று கூறியுள்ளார். அதன் பிறகு இருவரும் அடிக்கடி உல்லாசமாக இருந்து வந்த நிலையில் மாணவிக்கு மூன்று மாதங்களாக வயிற்று வலி மற்றும் தலைவலி இருந்துள்ளது. உடனே அவரின் தாயார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று பரிசோதித்த போது மாணவி மூன்று மாதம் கர்ப்பமாக இருப்பதை அறிந்து உடனே போலீசில் புகார் அளித்தனர். இதனைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்த போலீசார் கணபதியை போக்சோ வழக்கில் கைது செய்துள்ளனர்.