CGLE-2024க்கான விண்ணப்ப காலக்கெடுவை பணியாளர் தேர்வு ஆணையம் நீட்டித்துள்ளது. மொத்தம் உள்ள 17,727 பணியிடங்களுக்கான காலக்கெடு ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடைந்த நிலையில், தற்போது ஜூலை 27ஆம் தேதி இரவு 11 மணி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் கட்டணம் செலுத்த இம்மாதம் 28ஆம் தேதி கடைசி நாளாகும். பட்டப்படிப்பு முடித்தவர்கள் ssc.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.