நேபாளத்தில் 19 பேருடன் புறப்பட்ட விமானம் இன்று விபத்துக்குள்ளானது. இதில் பயணித்த 19 பேர் உயிரிழந்தனர். விபத்தில் சிக்கிய இந்த விமானம் Bombardier CRJ200 ரகமாகும். இந்த விமானத்தில் 50 பயணிகள் வரை பயணம் செய்ய முடியும்.
1991 மற்றும் 2006 க்கு இடையில் Bombardier ஏரோஸ்பேஸ் நிறுவனம் தயாரித்த இந்த விமானமானது Canadair Regional Jet (CRJ)-வில் உருவான முதல் விமானம் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த விமானம் வேகமாக இயங்க டர்போஃபேன் இயந்திரங்களைக் கொண்டுள்ளது.