வருமான வரிக்கணக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடு ஜூலை 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்நிலையில், ஐ.டி.ஆர் தாக்கல் செய்யும்போது ஏற்பட்ட அனுபவங்களை நெட்டிசன்கள் X பக்கத்தில் விவாதித்து வருகின்றனர். அந்த வரிசையில், டெல்லியைச் சேர்ந்த ஒருவர், IT நோட்டீஸை சரிசெய்ய ஆடிட்டருக்கு ₹50,000 கட்டணம் கொடுத்ததாகவும், ஆனால், கணக்கில் ₹1 மட்டுமே மிஸ்மேட்ச் இருந்ததாகவும் பதிவிட்டிருப்பது வைரலாகி வருகிறது.