தமிழகத்தில் உதயநிதியுடன் சேர்த்து அமைச்சர் துரைமுருகனுக்கும் துணை முதல்வர் பதவி வழங்குவது குறித்து திமுக தலைமை ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. மூத்த தலைவர்கள் இருக்கும்போது அவருக்கு பதவி வழங்குவதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்த நிலையில் கட்சியிலும் அதிருப்தி எழும் என்பதால் மேலிடம் இம்முடிவை எடுத்ததாக தெரிகிறது. இது குறித்து துரைமுருகனிடம் கேட்டபோது துணை முதல்வர் பதவி கொடுத்தால் யார் தான் வேண்டாம் என்பார்கள் என்று கூறியிருந்தார்.