2024 மக்களவைத் தேர்தலில் ராகுல் காந்தி ரேபரேலி மற்றும் வயநாடு ஆகிய 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இந்த 2 தொகுதிகளிலும் ராகுல் காந்தி வெற்றி பெற்றுள்ளார். நாடாளுமன்ற விதிகளின்படி தேர்தல் முடிவுகள் வெளியான 14 நாட்களுக்குள் ஏதேனும் ஒரு தொகுதியை ராஜினாமா செய்ய வேண்டும். அதன்படி ஜூன் 18ஆம் தேதிக்குள் அவர் ராஜினாமா செய்ய வேண்டும். இந்த நிலையில் இன்று அல்லது நாளை அவர் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.