முதலமைச்சரின் கிராம சாலைகள் திட்டத்தின் கீழ் அடுத்த 2 ஆண்டுகளில் 10,000 கி.மீ. தூரமுள்ள ஊரக சாலைகள் ரூ.4,000 கோடியில் மேம்படுத்தப்படும் என்று முதவமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். சட்டப்பேரவையில் விதி எண் 110-ன் கீழ் அறிவிப்பை வெளியிட்டு வரும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழ்நாட்டில் 1.38 லட்சம் கி.மீ. நீளமுள்ள கிராம ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய சாலைகள் உள்ளன. நகரம் மற்றும் கிராமம் என்ற வேறுபாடின்றி சாலை வசதிகள் மேம்படுத்தப்பட்டு வருகிறது” என தெரிவித்துள்ளார்.