விழுப்புரத்தில் 2 சிறுமிகளை கூட்டுப்பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், 15 பேருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரபா, ரவிக்குமார், துரைராஜ் உள்ளிட்ட அந்த 15 பேருக்கும், தலா ₹ 37,000 அபராதமும் விதித்து, போக்சோ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 2019ஆம் ஆண்டு 2 சிறுமிகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதில், ஒரு சிறுமி உயிரிழந்தார். மற்றொரு சிறுமி உடல்நலம் பாதிக்கப்பட்டார்.