கடந்த பத்து ஆண்டுகளை விட அடுத்து வரும் ஐந்து ஆண்டுகள் எங்களது ஆட்சி சிறப்பாக இருக்கும் என்று பிரதமர் மோடி மாநிலங்களவையில் பேசியுள்ளார். சர்வதேச அரங்கில் இந்தியாவின் மதிப்பு உயர்ந்திருப்பதாக கூறிய பிரதமர் மோடி, அடுத்த 20 ஆண்டுகளுக்கு பாஜக தான் ஆட்சியில் இருக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளார். தற்போது பொருளாதாரத்தில் ஐந்தாவது இடத்தில் இருக்கும் இந்தியா மூன்றாவது இடத்திற்கு முன்னேறும் என்றும் அவர் பேசினார்