வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க 20 ஆம் தேதி சென்னை வருகிறார் பிரதமர் நரேந்திர மோடி. சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திலிருந்து நாகர்கோவில் வரை இயங்கவுள்ள வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்க உள்ளார் பிரதமர் மோடி. மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக பதவியேற்ற பின்னர் முதல் முறையாக சென்னை வருகிறார் பிரதமர் மோடி.