கள்ளக்குறிச்சி விசா சாராய மரண சம்பவத்திற்கு நடிகர் சூர்யா, கண்டனம் தெரிவித்துள்ளார். சட்டவிரோதமாக விற்கப்படும் விஷ சாராயத்தை தடுக்க தவறிய ஆட்சி நிர்வாகத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்து அறிக்கை விட்டுள்ளார்.
அரசும், அரசியல் கட்சிகளும் தொலைநோக்கு பார்வையுடன் செயல்பட்டால் மட்டுமே தடுக்க முடியும். மதுவிலக்கு கொள்கை என்பது அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் நேரத்து பேசுபவர்களாக மட்டுமே உள்ளது. கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மாறி மாறி ஆட்சி புரிந்த அரசாங்கங்களே டாஸ்மாக் வைத்து மக்களை குடிக்க வைக்கின்ற அவலத்தை தொடர்ந்து பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். குடிப்பழக்கத்தை ஊக்கப்படுத்தி சொந்த மக்கள் மீது அரசு நடத்திவரும் வன்முறையை நிறுத்த வேண்டும்.
மதுப்பழக்கத்திற்கு அடிமையானவர்களின் மறுவாழ்விற்கு முன்னுதாரணமான திட்டங்களை வகுக்க வேண்டும். இறந்த உயிர்களுக்கு ஆழ்ந்த இரங்கல், மருத்துவமனையில் இருப்பவர்கள் மீண்டு வர பிரார்த்தனை செய்கிறேன் என நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். மேலும் மதுவிலக்கு கொள்கையில் மக்கள் நலன் சார்ந்த முடிவுகளை முதல்வர் எடுப்பார் என நம்புகிறேன் என தெரிவித்துள்ளார்.