சிவகங்கை காளையார்கோவில் கள ஆய்வில், 2,000 ஆண்டுகள் பழைமையான பானை ஓடு கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருக்கானப்பேர் என்று சங்க காலத்தில் அழைக்கப்பட்ட பாண்டியன் கோட்டையைச் சுற்றி கள ஆய்வு நடந்தது. அப்போது, ‘ன் கூட்டம்’ என தமிழி எழுத்து பொறிக்கப்பட்ட பானை ஓடு கண்டறியப்பட்டது. அத்துடன், வட்டச் சில்லுகள், குறியீடுகள், எலும்பாலான முனையுடைய கருவிகள் உள்ளிட்ட தொல் பொருள்களும் கிடைத்துள்ளன .