போயஸ் தோட்டத்தில் ஜெயலலிதாவை சந்திக்க முடியாமல் வெளியேறிய போது, கலைஞர் தங்களை அரவணைத்துக் கொண்டதாக விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். 2009 நாடாளுமன்ற தேர்தல் கூட்டணிக்காக ஜெயலலிதாவை சந்திக்க சென்றதாகவும், அவர் தங்களை சந்திக்க மறுத்ததாக கூறிய அவர், இதை தெரிந்துகொண்டு கலைஞர் தங்களை அழைத்து 2 தொகுதிகளை கொடுத்து போட்டியிட கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.