2024 டி20 உலக கோப்பை தொடரில் குரூப் ஏ பிரிவில் உள்ள இந்தியா மற்றும் கனடா அணிகளுக்கு இடையேயான போட்டி மழையால் பாதிக்கப்பட்டுள்ளது. சென்ட்ரல் ப்ரோவர்ட் பார்க் & ப்ரோவர்ட் கவுண்டி ஸ்டேடியத்தில் இன்று 33வது லீக் போட்டி நடைபெற இருந்த நிலையில் அங்கு மழை பெய்து வருவதால் மைதானம் முழுவதும் ஈரப்பதமாக உள்ளது. இதனால் டாஸ் போடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. முன்னதாக மூன்று போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணி சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறி உள்ளது குறிப்பிடத்தக்கது.