2024 டி20 உலக கோப்பை லீக் போட்டியில் நேற்று வங்கதேசம் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த தென்னாப்பிரிக்கா அணி 20 ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் சேர்த்தது. அதிகபட்சமாக அந்த அணியில் ஹென்ரிச் கிளாசன் 46 ரன்களும், டேவிட் மில்லர் 29 ரன்களும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய வங்கதேச அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக டவ்ஹித் ஹ்ரிடோய் 37 ரன்களும், மஹ்முதுல்லாஹ் 20 ரன்களும் எடுத்தனர். இதனால் தென்னாபிரிக்க அணி 4 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் 113 ரன்கள் எடுத்து வெற்றி பெற்ற தென்னாபிரிக்க அணி உலக கோப்பையில் குறைந்த ரன்கள் (113) எடுத்தும் வெற்றி பெற்ற அணி என்ற சாதனையை படைத்துள்ளது.
‘இதற்கு முன்னதாக பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா 119 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றதே சாதனையாக இருந்தது. மேலும் டி20யில் வங்கதேசத்துக்கு எதிராக அதிக வெற்றிகள் பெற்ற இரண்டாவது அணி என்ற சாதனையையும் தென்னாப்பிரிக்கா படைத்துள்ளது.