2024 டி20 உலகக் கோப்பையில் இன்று நியூசிலாந்து மற்றும் பப்புவா நியூ கினியா அணிகள் மோத உள்ளன இதுவரை 3 போட்டியில் விளையாடியுள்ள நியூசிலாந்து ஒரு வெற்றி 2 தோல்வியுடன் 2 புள்ளிகளை பெற்று சி பிரிவில் மூன்றாவது இடத்தில் உள்ளது. பப்புவா நியூ கினியா அணியும் தான் விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோல்வியடைந்துள்ளது. இரண்டு அணிகளுமே தொடரில் இருந்து ஏற்கனவே வெளியேறி உள்ளதால் இந்த ஆட்டம் சம்பிரதாய போட்டியாகவே இருக்கும்.