நடப்பு டி20 உலக கோப்பை தொடரில், தென்னாப்பிரிக்கா அணி தொடர்ச்சியாக 7 வெற்றிகளை பதிவு செய்துள்ளது. D பிரிவில் இடம்பெற்று விளையாடிய தென்னாப்பிரிக்கா, 4 லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்றது. இதேபோல சூப்பர் 8 சுற்றில், குரூப் 2இல் இடம்பிடித்த தென்னாப்பிரிக்கா, விளையாடிய 3 ஆட்டங்களிலும் வென்று அரையிறுதிக்கு முன்னேறியது. இதன்மூலம், நடப்பு டி20 உலக கோப்பை தொடரில் விளையாடிய அனைத்துப் போட்டிகளிலும் வென்ற அணி என்ற பெருமையை தென்னாப்பிரிக்க அணி பெற்றுள்ளது.