2024 டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் ஆப்கானிஸ்தான் மற்றும் அமெரிக்கா அணி வீரர்கள் சிறப்பாக விளையாடி வருகின்றனர். குறிப்பாக அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் ஆப்கானிஸ்தானை சேர்ந்த குர்பாஸ், அமெரிக்க வீரர் ஆரோன் ஜோன்ஸ் ஆஸ்திரேலியா வீரர் டேவிட் வார்னர், ஆப்கானிஸ்தான் வீரர் ஜர்தான், அமெரிக்க வீரர் ஆன்ட்ரீஸ் ஆகியோர் முதல் 5 இடங்களில் உள்ளனர். இதனால் அந்த வீரர்களை பாராட்டி வரும் ரசிகர்கள் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் விராட் கோலி, தென்னாப்பிரிக்க வீரர் குயிண்டன் டிகாக், ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட் போன்ற முன்னணி வீரர்கள் ஜொலிக்கவில்லை என விமர்சித்து வருகின்றனர்.