2024 டி20 உலக கோப்பை தொடரின் லீக் சுற்று போட்டிகள் இன்றுடன் முடிவடைய உள்ள நிலையில், நாளை மறுநாள் (ஜூன் 19ஆம் தேதி) முதல் சூப்பர் 8 சுற்றுகள் தொடங்குகின்றது. சூப்பர் 8 சுற்றில் மொத்தம் எட்டு அணிகள் இரு பிரிவுகளாக பிரிந்து மோதுகின்றன. இதில் குரூப் 1 இல் இந்தியா, ஆப்கானிஸ்தான், ஆஸ்திரேலியா மற்றும் வங்கதேசம் அணிகள் இடம் பெற்றுள்ளன. குரூப் 2ல் இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, அமெரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய அணியில் இடம் பெற்றுள்ளன. அதில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு செல்லும். நாளை மறுநாள் முதல் சூப்பர் 8 போட்டியில் அமெரிக்கா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன.