2024-25 நிதியாண்டின் நிகர நேரடி வரி வருவாய் 19.54% அதிகரித்து, ரூ 5,74,357 கோடியாக உயர்ந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இது கடந்த நிதியாண்டில் இதே காலகட்டத்தில் ரூ.4,80,458 கோடியாக இருந்தது. அதே நேரம், மொத்த நேரடி வரி வசூல் 23.24% அதிகரித்து, ரூ.5,23,563 கோடியிலிருந்து ரூ.6,45,259 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் கார்பரேட் வரி வசூல் ரூ.2,65,336 கோடியாகவும், தனிநபர் வரி வசூல் ரூ.3,61,862 கோடியாக உள்ளது.