2025 ஐபிஎல்-ல் விளையாடுவது குறித்து யோசிக்க நிறைய நேரம் இருக்கிறது என சிஎஸ்கே வீரர் எம்.எஸ்.தோனி பேட்டியளித்துள்ளார். மேலும் அவர், அடுத்த சீசனில் நான் விளையாடும் முடிவு, எத்தனை வீரர்களை தக்க வைத்துக்கொள்ள கிரிக்கெட் வாரியம் அனுமதி கொடுக்கவுள்ளது என்பதை பொறுத்து உள்ளது. எங்கள் கையில் எதுவும் இல்லை. அடுத்த சீசனுக்கான விதிமுறைகள் தெரிந்தபின் நான் என் முடிவை எடுப்பேன். அது அணியின் நலனுக்கானதாக இருக்க வேண்டியது அவசியம் என்று தெரிவித்துள்ளார்.