பாகிஸ்தானில் 2025இல் நடைபெறும் சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்திய அணி பங்கேற்காவிட்டால், அதற்கு பதிலாக எந்த அணி பங்கேற்கும் என்ற தகவல் வெளியாகியுள்ளது. 2023 உலகக் கோப்பை புள்ளிகள் அடிப்படையில், முதல் 8 இடங்களை பிடித்த அணிகள் இந்த தொடருக்கு தகுதி பெற்றுள்ளன. ஒருவேளை பாகிஸ்தான் செல்ல இந்திய அணிக்கு மத்திய அரசு அனுமதி மறுத்தால், 9ஆவது இடத்தில் உள்ள இலங்கை, போட்டியில் விளையாட தகுதி பெறும்.