சட்டப்பேரவையில் 110 விதியின்கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்புகளை வெளியிட்டார். அப்போது அவர், கடந்த 3 ஆண்டில் 65,483 அரசு பணியிடங்கள் நிரப்பப்பட்டு உள்ளதாக கூறினார். மேலும், 2026 ஜனவரிக்குள் டிஎன்பிஎஸ்சி மூலம் 17,595, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 19,260, மருத்துவ தேர்வு வாரியம் மூலம் 3,041, சீருடை பணியாளர் தேர்வாணையம் மூலம் 6,688 என மொத்தம் 75,000 பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.