2026 சட்டமன்றத் தேர்தலிலும் பாஜகவுடன் கூட்டணி இல்லை என இபிஎஸ் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகத்தில், மக்களவைத் தேர்தல் தோல்வி குறித்து நிர்வாகிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட அவர், அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தல் பணியாற்ற அழைப்பு விடுத்துள்ளார். இதனிடையே, பலவீனமான கூட்டணியே தேர்தல் தோல்விக்கு காரணம் என சில நிர்வாகிகள் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.