தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் விஜய் கட்சியுடன் இணைந்து நாம் தமிழர் கட்சி போட்டியிட வாய்ப்புள்ளதாக சீமான் சூசகமாக தெரிவித்துள்ளார். நடிகர் விஜய் இன்று கல்வி விருது வழங்கி வரும் நிலையில் இந்த விழாவை பாராட்டியுள்ள சீமான், போதை பொருள் விழிப்புணர்வு குறித்து விஜய் பேசியது கவனத்தை ஈர்த்துள்ளது என்றார். மேலும் தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசித்து உரிய நேரத்தில் முடிவு அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.