மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டட பணி 2026, அக்டோபர் மாதம் நிறைவடையும் என மக்களவையில், மத்திய சுகாதார அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டடப் பணிகளுக்காக இதுவரை ரூ.157 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி, தற்போது ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் செயல்பட்டு வருகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் ஆண்டு மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.