2026 சட்டமன்றத் தேர்தலிலும் திமுக – மதிமுக கூட்டணி தொடரும் இன்று துரை வைகோ அறிவித்துள்ளார். திமுகவின் 3 ஆண்டுகால ஆட்சிக்கு மக்கள் கொடுத்த நற்சான்று தான் இந்த தேர்தல் முடிவு என பெருமிதம் தெரிவித்த அவர், மதிமுகவை வலுப்படுத்தும் நோக்கில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளேன் என்றும், இந்த தேர்தல் முடிவு மதிமுக தொண்டர்களை உற்சாகமடைய செய்துள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.