2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக வலுவான கூட்டணியை அமைக்கும் என நிர்வாகிகளிடம் இபிஎஸ் உறுதியளித்துள்ளார். மயிலாடுதுறை தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், தேர்தல் தோல்வியால் அதிமுக தொண்டர்கள் யாரும் துவண்டுவிட வேண்டாம் எனக் கேட்டுக்கொண்டார். சிறுபான்மை மக்களின் மனநிலை எதிர்காலத்தில் மாறும் என்றும், அவர்களின் நம்பிக்கையைப் பெற தொடர்ந்து உழைப்போம் என்றும் கூறியுள்ளார்.