2027ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒருநாள் உலகக்கோப்பை தொடரில் ரோஹித் ஷர்மா இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் குறைவு என முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார். ரோஹித் ஷர்மாவுக்கு இன்னும் 3 ஆண்டுகளில் 40 வயது பூர்த்தியடைவதால் உடல் தகுதி அடிப்படையில் இடம்பெறுவது கடினம் என அவர் கணித்துள்ளார். அதே சமயம், நல்ல உடல் தகுதியுடன் இருக்கும் விராட் கோலிக்கு வாய்ப்புகள் உள்ளதாகவும் கூறியுள்ளார்.