மயிலாடுதுறை, புதுக்கோட்டை, விருதுநகர், ராமநாதபுரம், திருச்சி, திருவண்ணாமலை, திண்டுக்கல் மாவட்டங்களில் சமத்துவபுரங்கள் இந்தாண்டுக்குள் அமைக்கப்படும் என ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார். மேலும் அவர், “கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் ஓராண்டில் ஒரு லட்சம் வீடுகள் கட்டி தரப்படுவதோடு, 2030-ம் ஆண்டுக்குள் குடிசை இல்லா தமிழகம் அமைக்க திட்டம் செயல்படுத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.