2047 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதே ஒவ்வொரு இந்தியரின் லட்சியம் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். நிதி ஆயோக் கூட்டத்தில் பேசிய அவர், மக்களுடன் நேரடி தொடர்பில் உள்ளதால் இந்த லட்சியத்தை நிறைவேற்றுவதில் மாநில அரசுகள் முக்கிய பங்காற்றும் என்றார். சர்வதேச முதலீடுகளை ஈர்க்கும் வகையில் கொள்கைகளை வகுத்து இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றுவதற்கான படிக்கட்டாக இந்த கூட்டம் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.