தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் அதிமுக வென்று ஆட்சி அமைக்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் இ பி எஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். அதிமுக அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் பேசிய இபிஎஸ், 5 ஆண்டு கால ஆட்சியில் இரு முறை கூட்டுறவு கடன் மற்றும் பயிர் கடன்களை தள்ளுபடி செய்யப்பட்டதாக கூறினார். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்த வரலாற்று பெருமை அதிமுகவுக்கு உண்டு எனவும் தெரிவித்துள்ளார்.