கள்ளச்சாராய விற்பனை குறித்து பிபிசி நடத்திய கள ஆய்வில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது டாஸ்மாக் மதுவின் விலை அதிகமாக இருப்பதால் விலை குறைவான கள்ளச்சாராயத்தை நோக்கி பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கள்ளக்குறிச்சியில் அதிகாலை முதல் நள்ளிரவு வரை எப்போதும் சாராயம் கிடைப்பதாகவும் டோர் டெலிவரி வசதியும் உண்டு எனவும் அப்பகுதி பெண்கள் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.