கல்வி உரிமை சட்டத்தின் கீழ் (RTE) பொருளாதார ரீதியில் பின்தங்கியோருக்கு 25% ஒதுக்கீட்டில் CBSE, ICS பள்ளிகளை சேர்க்க இயலாது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஈஸ்வரன் என்பவர் தொடுத்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு, “CBSE, ICS பள்ளிகளுக்கு அரசு கட்டணம் நிர்ணயிப்பதில்லை. எனவே, அந்த பள்ளிகளை 25% இடஒதுக்கீட்டில் சேர்க்க இயலாது” எனக் கூறியுள்ளது.