கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான 25% ஒதுக்கீட்டில் சிபிஎஸ்இ, ஐசிஎஸ் பள்ளிகளை சேர்க்க இயலாது என்று தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. சிபிஎஸ்இ, ஐசிஎஸ் பள்ளிகளுக்கு மாநில அரசு கட்டணம் நிர்ணயம் செய்வதில்லை என்பதால், அப்பள்ளிகளை 25% ஒதுக்கீட்டில் சேர்க்க இயலாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் கீழ் வசிக்கும் இடத்திலிருந்து 5 கிலோமீட்டர் சுற்றளவில் உள்ள தனியார் பள்ளிகளில் இலவச கல்விக்கான இட ஒதுக்கீட்டை தமிழக அரசு வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.