காலியாக உள்ள 2553 அரசு மருத்துவர் பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் 1021 அரசு மருத்துவர் பணியிடங்கள் நிரப்பப்பட்டதாகவும், இது போல் மற்ற இடங்களும் விரைவில் நிரப்பப்படும் என்றும், மருத்துவர் சேவை ஆள்சேர்ப்பு மையத்தால் மருத்துவர்கள் தேர்வு செய்யப்பட்டு விரும்பும் இடத்தில் பணியமர்த்தப்படுவர் என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.