தமிழகத்தில் 26 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை இடியுடன் மழை பெய்யக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை உள்பட 6 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும். இதேபோல, சென்னை, உள்பட 20 மாவட்டங்களில் லேசான மழை பெய்யக் கூடும் எனக் கூறப்பட்டுள்ளது. இந்த நிலையில், நீலகிரி, விழுப்புரம், திருப்பூர் மாவட்டங்களில் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.