இலங்கை கடற்படையின் அத்துமீறல்களை மத்திய அரசு தடுக்க வேண்டும் என சிபிஐ மாநிலச் செயலாளர் முத்தரசன் வலியுறுத்தியுள்ளார். இலங்கை கடற்படையினரால், தமிழக மீனவர்கள் 26 பேர் கைதாகியுள்ளதாக கூறிய அவர், 13 விசைப் படகுகளும், மீன்பிடி உபகரணங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். மத்திய அரசு இனியும் தாமதிக்காமல், மீனவர்களை காப்பாற்ற வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.