உத்திரப்பிரதேச தலைநகர் லக்னோவில் மருந்து வாங்கச் சென்ற 28 வயது தலித் பெண், 7 பேரால் கடத்தப்பட்டு கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். அந்த பெண்ணை அடித்து மொபைல் போனை பறித்து தோட்டத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். பிறகு குற்றவாளியின் பிடியில் இருந்து தப்பிய பெண், போலீசாரிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், முக்கிய குற்றவாளியான அன்வர் என்பவரை கைது செய்தனர். இதனை தொடர்ந்து மற்ற குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர்.