கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவம் ஒட்டுமொத்த தமிழகத்தையும் உலுக்கியுள்ளது. இதுவரை 39 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலரின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது. இந்த நிலையில் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளை கவனிக்க வட்டாட்சியர்கள் , தனி வட்டாட்சியர்களை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் கருணாபுரத்தை சேர்ந்த 29 பேரின் உடல்களை ஒரே இடத்தில் அடக்கம் செய்வதற்கான ஏற்பாடுகளையும் தமிழக அரசு சார்பாக அதிகாரிகள் மேற்கொண்டு வருகிறார்கள்